×

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சின்னர், ஜாஸ்மின் 2வது சுற்றில் வெற்றி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 2வது சுற்றில் 7ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் 28 வயதான ஜாஸ்மின் பவுலினி, 7-6, 6-2 என்ற செட் கணக்கில், கிரீட் மின்னேனை வீழ்த்தினார். 9ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்கரி 7-5, 6-3 என நெதர்லாந்தின் அரன்ட்சா ரசையும், உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா, 3-6, 6-4, 7-10 என பிரான்சின் வர்வரா கிராச்சேவாவையும், குரோஷியாவின் டோனா வெக்கிச் 6-2, 6-3 என ரஷ்யாவின் எரிகா ஆண்ட்ரீவாவையும் வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

இங்கிலாந்தின் எம்மா ராடுகானு 6-1, 6-2 என பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சையும், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு, 6-3, 7-5 என செக்குடியரசின் லிண்டாவையும் வென்றனர். முன்னாள் நம்பர்1 வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 4-6, 1-6 என அமெரிக்காவின் எம்மா நவரோவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், 7-6, 7-6, 2-6, 7-6 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினியை போராடி வென்றார். ஆடவர் இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மத்தேயு எப்டன் நெதர்லாந்து ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தது.

 

The post விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சின்னர், ஜாஸ்மின் 2வது சுற்றில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Sinner ,Wimbledon tennis series ,Jasmine ,London ,Grand Slam ,Jasmine Paulini ,Italy ,Dinakaran ,
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர்...