×
Saravana Stores

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பதவியேற்பதற்காக 4 நாட்கள் பரோல்!!

டெல்லி : மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பதவியேற்பதற்காக 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றை சூறையாடிய வழக்கில் காலிஸ்தான் ஆதரவாளரும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அசாம் சிறையில் அடைக்கப்பட்ட அவர், காதூர் சாஹிப் தொகுதியில் இருந்து சுயேட்சையாக போட்டியிட்டு 1.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து மக்களவை எம்.பி.யாக பதவியேற்பதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்று அம்ரித்பால் சிங் பஞ்சாப் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கோரிக்கை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரது ஒப்புதலுடன் அம்ரித்பால் சிங்கிற்கு 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை பரோலில் வெளி வரும் அவர், அன்றைய தினம் எம்பியாக ஓம்பிரலா முன்னிலையில் பதவியேற்க உள்ளார். மேலும் காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா எம்.பி., தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பயங்கரவாதி ஷேக் அப்துல்லா ரஷீத் வரும் 6-ம் தேதி ( சனிக்கிழமை) பதவியேற்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

The post மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பதவியேற்பதற்காக 4 நாட்கள் பரோல்!! appeared first on Dinakaran.

Tags : Khalistan ,Amritpal Singh ,Lok Sabha elections ,Delhi ,Amritsar ,Waris Punjab De ,
× RELATED கனடாவில் பதுங்கியிருந்த காலிஸ்தான்...