×

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை

கரூர், ஜூலை 4: கரூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அரசு கலைக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார். அனைத்து துறை பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட எஸ்பி பிரபாகர் கல ந்து கொண்டு பேசியதாவது, பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றிதான் சிறப்பான வெற்றி. முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை. வெற்றி கிடைக்கவில்லை என முயற்சி செய்யாமல் இருந்து விடக்கூடாது.கல்விதான் அனைவருக்கும் முக்கியம். அந்த கல்வி மட்டுமே என்றும் அழியாதது. அதுதான் உங்களை உயர்த்தும். சாதாரண கிராமத்தில் பிறந்த நான், தற்போது மாவட்ட எஸ்பியாக உள்ளேன். எல்லாரும் சாதிக்க முடியும். அதற்கான வித்து உங்களிடம்தான் உள்ளது.

பூமியே நம் காலடியில்தான் உள்ளது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. ஏன்? நம்மால் முடியவில்லை என அலசி ஆராயும் பண்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். 12ம் வகுப்பு முடித்த நீங்கள் அனைவரும் வெற்றியாளர்கள்தான். அந்த காலக்கட்டத்தில், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஒரு ஆண்டு காத்திருக்கும் சூழல் இருந்தது. தற்போது உங்களுக்கு அப்படியில்லை. உடனுக்கு உடன் தேர்வு எழுதி, அடுத்த கட்டத்துக்கு செல்லும் நிலை உள்ளது. கடந்த கால நிகழ்வுகள், பெற்றோர்கள் பட்ட கஷ்டம் போன்றவற்றை உள்வாங்கி செயல்பட்டால் வாழ்வில் உயரலாம். வாழ்க்கை ஒரு முறைதான், அதனை சிறப்பாக நாம் வாழ்ந்து விட வேண்டும். அனைவரின் வாழ்விலும், விலை மதிப்பற்றவர்கள் இரண்டு பேர்கள்தான். ஒருவர் ஆசிரியர், மற்றொருவர் நம் பெற்றோர்கள்.இதனை உணர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளும் மென்மேலும் உயர்ந்து அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ வேண்டும் என்றார்.

The post இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை appeared first on Dinakaran.

Tags : Karur ,Government Arts College ,Principal ,Alexander ,Government Arts ,College ,Auditorium ,
× RELATED அரசு கலைக்கல்லூரி முன்பு நடைமேம்பாலம்