பரமக்குடி,ஜூலை 4: வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 5 லட்ச ரூபாய் பணத்தை தர மறுத்த ஆந்திராவை சேர்ந்தவரிடம் பணத்தை மீட்டெடுத்து, கைது செய்வதற்காக பரமக்குடி போலீசார் ஆந்திரா சென்றனர். பரமக்குடியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர், உறவினர் ஒருவருக்கு 5 லட்ச ரூபாய் வங்கியில் செலுத்துவதற்கு கொடுத்துள்ளார். ஆனால் வங்கி கணக்கு எண் தவறுதலாக பதிவு செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபாய் ஆந்திராவை சேர்ந்த குணேகர் ரெட்டி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை திருப்பி அனுப்புமாறு வங்கி மேலாளர் பலமுறை கூறியும், பணத்தை தர மறுத்து காலம் தாழ்த்தியுள்ளார். இதுகுறித்து பரமக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் கேசிலு புகாரின் பேரில், பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆந்திராவில் உள்ள குணேகர் ரெட்டியை பிடிக்க பரமக்குடி டவுன் எஸ்ஐ வெங்கடேசன் தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸ் குழு ஆந்திரா சென்றுள்ளது.
The post தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.5 லட்சத்தை கொடுக்க மறுப்பு ஆந்திரா சென்ற பரமக்குடி போலீஸ் appeared first on Dinakaran.