×

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

திருவாடானை, ஜூலை 4: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு காலியாக உள்ள பாடப்பிரிவுகளான பி.ஏ-தமிழ், பி.ஏ-ஆங்கிலம், பி.எஸ்.சி-கணிதம், பி.எஸ்.சி- விஸ்காம், பி.எஸ்.சி – கணிப்பொறி அறிவியல், பி.காம் – தமிழ், ஆங்கில வழி உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.ஆகையால் இந்த அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை மூன்று தினங்களில் கல்லூரிக்கு நேரடியாக சென்று உரிய விண்ணப்ப படிவத்தை பெற்று அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேரலாம் என கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

The post அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Govt Arts College ,Thiruvadanai ,Thiruvadanai Government College of Arts and Science ,Government Arts College ,Dinakaran ,
× RELATED பெரும்பாக்கம் அரசு கலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை