×

வேடசந்தூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

வேடசந்தூர், ஜூலை 4: வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சௌடேஸ்வரி கோவிந்தன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரகடம்பு கோபு, சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் 13 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு துணை தலைவர் தேவசகாயம் நன்றி தெரிவித்தார்.

The post வேடசந்தூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Panchayat union committee ,Vedsandur ,Vedasandur ,Vedasandur panchayat union committee ,Union Committee ,President ,Choudeswari Govindan ,District Development Officers ,Veerakadambu Gobu ,Saravanan ,Panchayat Union ,Committee ,Dinakaran ,
× RELATED வேடசந்தூரில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்