×

விதிகளை மீறி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

பள்ளிபாளையம், ஜூலை 4: குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரி பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர், பள்ளிபாளையம், வெப்படை, காகிதஆலை காலனி உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் 440 வாகனங்கள் சோதனையிடப்பட்டது. அப்போது, உரிய ஆவணங்களை புதுப்பிக்காமல் இயக்கிய 9 வாகனங்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தவிர அதிக பாரமேற்றிய 13 சரக்கு லாரிகளையும், ஆட்களை ஏற்றி வந்த 11 சரக்கு வாகனங்களையும் கண்டுபிடித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்ற 14 பேர் மீதும், செல்போன் பேசியபடி பைக் ஓட்டிச்சென்ற 12 பேர் மீதும் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு, ₹5.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ₹1.45 லட்சம் உடனடியாக பெறப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

The post விதிகளை மீறி இயக்கிய வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Kumarapalayam ,Poonguzali ,Sivakumar ,Webbadai ,Paper Mill Colony ,
× RELATED பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்கிய நல்லாசிரியர்