×

உணவில் புழுக்கள் இறந்துகிடந்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரியாணி ஓட்டலில் திடீர் சோதனை

அண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார். இவர் நேற்றுமுன்தினம் அமைந்தகரையில் உள்ள பிரபல ஓட்டலில் மட்டன், சிக்கன் ஆகிய பிரியாணி ஆர்டர் கொடுத்து வரவழைத்து தனது வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது ஆனியன் ரைத்தாவை பிரித்தபோது புழுக்கள் இறந்துகிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுசம்பந்தமாக ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘’தெரியாமல் தவறு நடந்துவிட்டது. எனவே, வேற பிரியாணி உங்களுக்கு தருகிறேன்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனிடையே புழுக்கள் கிடந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை ஆய்வு செய்தனர்.

சிக்கன், மட்டன் பிரியாணி, ஆனியன் ரைத்தா ஆகியவற்றை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். ஏ.சி.யில் வைக்கப்பட்டிருந்த பால், தயிர் உள்பட ஓட்டல் முழுவதும் ஆய்வு செய்தனர். ஓட்டல் நிர்வாகத்துக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறும்போது, ‘’ ஓட்டலில் தரமற்ற உணவு வழங்கப்பட்டால் உடனே உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுங்கள். புகாரை தெரிவிக்க வாட்ஸ் அப்பில் அனுப்பினால் போதும் விரைந்துவந்து பிரச்னை தீர்க்கப்படும். சமூகவலைதளம் மூலம் வீடியோ வெளியிட்டால் எப்படி தெரியவரும். எனவே, வாடிக்கையாளர்கள் முறையாக உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கவேண்டும்’ என்றனர்.

The post உணவில் புழுக்கள் இறந்துகிடந்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரியாணி ஓட்டலில் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,Annanagar ,Jagadish Kumar ,Villivakkam Rajaji Nagar, Chennai ,Suktakarai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் நூடுல்ஸ்...