×

திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரில் 32 குளங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தவறினால் நில நிர்வாக ஆணையர், பொதுப்பணித் துறை, அறநிலையத்துறை செயலர்கள் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தி.மலை நகரில் உள்ள 138 குளங்களில் 32 குளங்களை ஆக்கிரமித்து கட்டுமானம் எழுப்பப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Tiruvannamalai ,Tamil Nadu government ,Administration ,Department of Public Works ,Foundation Department ,
× RELATED தியாகிகளின் குடும்பத்தினருக்கு...