×

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு..!!

டெல்லி: டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். நாளை டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பிரதமரை சந்தித்து வாழ்த்து பெறுகிறது. நாளை காலை 11 மணிக்கு பிரதமரை சந்திக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாலை மும்பை செல்ல உள்ளனர். உலகக்கோப்பையுடன் நாளை மாலை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.

The post இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,cricket team ,T20 World Cup ,Modi ,Rohit Sharma ,Dinakaran ,
× RELATED மகளிர் டி20 உலககோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு