மதுரை: திண்டுக்கல் மாவட்டம் தெப்பம்பட்டியில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தெப்பம்பட்டியில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையில், காலனித்துவ அதிகாரத்துக்கும் குடியரசு ஆட்சிக்கும் வேறுபாடுகள் உள்ளன. அரசு அலுவலர்கள் இந்த விவகாரத்தை முழுமையான நோக்கத்துடன் பார்த்து செயல்பட வேண்டும். பொதுத்துறை ஊழியர்கள் இருக்கிறார்கள், ஆனால் பொதுத்துறையில் சேவை இல்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தெப்பம்பட்டி கிராமத்தில் 500 குடும்பத்தினருக்கு 3 மாதங்களில் இலவச வீட்டு பட்டா வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
The post பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.