- யூரோ கோப்பை கால்பந்து
- துருக்கி
- ஆஸ்திரியா
- பெர்லின்
- 17வது யூரோ கோப்பை கால்பந்து
- ஜெர்மனி
- 16
- பிபா
- தின மலர்
பெர்லின்: 17வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது ரவுன்ட் 16 நாக்அவுட் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த போட்டியில் பிபா தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, 47வது இடத்தில் உள்ள ருமேனியாவுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஆட்டத்தின் 20வது நிமிடத்தில்,காக்போ கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். தொடர்ந்து ஆட்டத்தின் 2வது பாதியில் டோனியேல் மாலன் 83வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட 3வது நிடத்தில் (ஆட்டத்தின் 93வது நிமிடம்) அவர் தனது 2வது கோலை அடித்தார். ருமேனியா வீரர்கள் கடைசி வரை போராடியும் ஆறுதல் கோல் கூடஅடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்று கால்இறுதிக்கு பெற்றது. தொடர்ந்து நேற்றிரவு 12.30 மணிக்கு நடந்த ரவுன்ட் 16 சுற்றின் கடைசிபோட்டியில், 42வது ரேங்கில் உள்ள துருக்கி , 25வது இடத்தில் உள்ள ஆஸ்திரியா அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 58 வினாடிகளிலேயே துருக்கியின் மெரிஹ் டெமிரல் கோல் அடித்தார். முதல் பாதியில் 1-0என துருக்கி முன்னிலை வகித்தது.
2வது பாதியில் ஆட்டத்தின் 59வது நிமிடத்தி்ல் மெரிஹ் டெமிரல் தனது 2வது கோலை அடித்தார். இதனால் 2-0 என துருக்கி முன்னிலை பெற்ற நிலையில், ஆஸ்திரியாவின் மைக்கேல் கிரிகோரிட்ச், 66வது நிமிடத்தில் கோல் அடித்தார். தொடர்ந்து அந்த அணியின் கோல் முயற்சிகளை கடைசி நேரத்தில் துருக்கி கோல் கீப்பர் மெர்ட் குனோக் சிறப்பாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார். முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் துருக்கி வெற்றிபெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதிபோட்டியில் துருக்கி-நெதர்லாந்துடன் மோதுகிறது.
The post யூரோ கோப்பை கால்பந்து: ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு துருக்கி தகுதி appeared first on Dinakaran.