- அங்கன்வாடி
- Manur
- அங்கன்வாடி நிலையம்
- துலுக்கார்குளம்
- தென்கலம்புதூர்
- மானூர் ஒன்றியம்
- லீகா
- அங்கன்வாடி மத்திய கட்டிடங்கள்
மானூர், ஜூலை 3: மானூர் அருகே துலுக்கர்குளம் கிராமத்தில் ₹11 லட்சம் மதிப்பிலும், தென்கலம்புதூர் கிராமத்தில் ₹10.90 லட்சம் மதிப்பிலும் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு நடந்தது. இதில் மானூர் ஒன்றிய தலைவர் லேகா தலைமை வகித்து கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் தென்கலம் சேக் அப்துல் காதர், துலுக்கர்குளம் புஷ்பம், மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் மாரிப்பிரியா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜபிரியா, திமுக பிரதிநிதிகள் வின்சென்ட், முகமது அலி காசிம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும், குழந்தைகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
The post மானூர் அருகே அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.