- அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ் வளர்ச்சி மற்றும்
- செய்தி துறை
- திரு. சாமிநாதன்
- சென்னை
- தமிழ் வளர்ச்சி
- MA) பத்திரிகைத் துறை
- திரு.
- சாமிநாதன்
- செய்தி பொது உறவுகள் திணைக்களம்
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- கே. ஸ்டாலின்
- திராவித மாதிரி ஊராட்சி
- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
- தின மலர்
சென்னை: தமிழ் வளர்ச்சி (ம)செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் புதியதாக நியமனம்செய்யப்பட்டுள்ள மூன்று வாகன ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள், அறிவிப்புகள், ஆணைகள், செய்தி வெளியீடுகள், அறிக்கைகள், வேண்டுகோள்கள் முதலிய அனைத்தையும் மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சென்று சேர்த்திடும் அரும்பணியை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.
இத்துறையில் ஒழிவாக இருந்த வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று பேருக்கு வாகன ஓட்டுநர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று (2.7.2024) வழங்கி வாழ்த்துகள் கூறினார்.
இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மருத்துவர் இரா.வைத்திநாதன், ஆகியோர் உடனிருந்தனர்.
The post தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான வாகன ஓட்டுநர் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் appeared first on Dinakaran.