கூடலூர், ஜூலை 2: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கூடலூரை அடுத்த புலியம் பாறை பகுதியில் உள்ள கோழிக்கொல்லி பழங்குடியினர் குடியிருப்புகளில் மழையால் பாதித்த மற்றும் வீடுகள் சேதம் அடைந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக மளிகை பொருட்கள்,காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. நாடுகாணி வனச்சரகர் வீரமணி தலைமையிலான குழுவினர் மழைவெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்.
The post மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல் appeared first on Dinakaran.