×
Saravana Stores

கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார் லெப்பை குடிகாடு பகுதியில் தேர்வான இடத்தில் விளையாட்டு திடல், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்

பெரம்பலூர், ஜூலை 2: லெப்பைக்குடிகாடு பகுதி யில் மாணவர்கள், இளைஞர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில்- விளையாட்டுத் திடல், உள் விளையாட்டு அரங்கம் அமைத்துத்தர வேண்டும் என ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (1 ஆம் தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வேப்பூர் ஒன்றியம், லெப்பைக் குடிகாடு பேரூராட்சியில் இயங்கி வரும் லெப்பைக் குடிகாடு ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் அமைப் பின் சார்பாக அதன் தலைவர் ரஹீம் பாபு தலைமையில் பொது மக்கள் திரண்டு வந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்ப தாவது :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, லெப்பை குடிக்காடு பேரூ ராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான ஒருங்கிணைந்த விளையாட்டுத் திடல் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ஜமாலி நகர் பூங்காவிற்கு பின் புறம் இடம் ஒதுக்கீடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு எங்கள் ஊர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இடத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்திட பேரூராட்சி மூலம் திட்ட அறிக்கை தயார் செய்யப் பட்டு தீர்மானம் நிறை வேற்றி மாவட்ட நிர்வாகத் தின் பார்வைக்குப் பேரூராட்சி நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் எங்கள் ஊரின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட போதுமான இடம் இல்லாத காரணத் தால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் இப்பதியில் இளைஞர்கள் சமூக சீர்கேட்டாலும், தீய பழக்கங்களுக்கு அடிமை யாவதாலும், அதனைத் தடுக்கும் பொருட்டும், இளைஞர்களின் திற மையை மேம்படுத்துவதற் காகவும், அவர்களது விளையாட்டுத் திறமையை ஒருங்கிணைக்க, அவர்கள் விளையாடுவதற்கு போது மான வசதிகளை ஏற்படுத் தித் தர வேண்டும். இதற்காக விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பகுதி யில் தண்ணீர் தேங்கியுள் ளதை போர்க்கால அடிப் படையில் அகற்றி மண லைக் கொட்டி மாணவர்க ளும், இளைஞர்களும் விளையாடுவதற்கு தேர்வு செய்த இடத்தைசரிசெய்து தர வேண்டும். விரைவில் ஒருங்கிணைந்த விளை யாட்டுத் திடல் மற்றும் உள் விளையாட்டு அரங்கத்தை அமைத்து தர வேண்டும். இளைஞர்களை சீர்கேட்டில் இருந்து தடுத்து பாதுகாத் திட வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரி வித்துள்ளனர்.

The post கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார் லெப்பை குடிகாடு பகுதியில் தேர்வான இடத்தில் விளையாட்டு திடல், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Collector ,Karpagam ,Leppi Gudigadu ,Perambalur ,Sports Association ,Leppaikudikad ,Perambalur District ,Collector Karpagam ,Dinakaran ,
× RELATED நத்தம் அருகே தொடரும் அவலம்...