- கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்
- அரியலூர்
- கலெக்டர்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்
- அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம்
- கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்
- அரியலூர் கலெக்டர்
- தின மலர்
அரியலூர், ஜூலை 2: அரியலூர் மாவட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் கிராமப்புற வீடுகளை பழுது பார்த்தல் திட்டம் ஆகியவற்றுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்தான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும்.இந்த திட்ட பயனாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்த கால அவகாசம் அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். இணைச் செயலர் பழனிவேல், ஒன்றிய நிர்வாகி பழனிசாமி, மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
The post அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.