×

நெட்பிளிக்ஸ் ஓடிடி கட்டணம் குறைப்பு: அமேசான் பிரைம் விலை ஏற்றம்

புதுடெல்லி: கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் உலகம் முழுவதும் மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் படம், வெப் சீரிஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் தனது மாதாந்திர கட்டணங்களை குறைத்துள்ளது. அந்த வகையில், இதுவரை ரூ200 இருந்து வந்த மொபைல் பிளான் கட்டணம் தற்போது ரூ149 என்று குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாதம் ரூ499 கட்டணம் வசூலிக்கப்பட்ட பேசிக் பிளான் தற்போது ரூ199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ649 ஆக இருந்த ஸ்டாண்டர்ட் பிளான் ரூ499 ஆகவும், ரூ799 ஆக இருந்த பிரீமியம் பிளான் ரூ649 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அமேசான் பிரைம் கட்டணத்தை அதிகரித்து உள்ளது. வருடாந்திர பிரைம் மெம்பர்ஷிப் திட்டத்திற்குப் பயனர்கள் ரூ1,499 செலுத்த வேண்டும். தற்போது 999 ரூபாய்க்கு இந்த திட்டம் உள்ளது. அமேசான் பிரைமில் தற்போது ரூ129 விலையில் இருக்கும் மாதாந்திர திட்டம் ரூ50 அதிகரித்து ரூ179ஆக மாறுகிறது….

The post நெட்பிளிக்ஸ் ஓடிடி கட்டணம் குறைப்பு: அமேசான் பிரைம் விலை ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Netflix ,Amazon ,New Delhi ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு