புதுக்கோட்டை, ஜூலை 2: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்மாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தனர். அப்போது கூறுகையில், தங்கள் கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர் கோயில் நிலங்கள் கோயில் பெயரிலும் கோயில் அர்ச்சகர் பெயரிலும் உள்ளதாகவும் இந்த நிலையில் தங்களுக்கு தெரியாமல் தற்போது வெளி கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் முறைகேடாக கோயில் உள்ளத்தை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்து நிலத்தை சீர்படுத்தி வருவதாகவும் அதுமட்டுமின்றி அந்த நலத்தை அபகரிக்க செய்ய முயல்வதாகவும் உடனடியாக இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய ஆய்வு மற்றும் பரிசீலனை செய்து கோயில் நிலத்தை மீட்டு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பொன்னமராவதி அருகே கோயில் நிலைத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.