- திருவாரூர் கலெக்டர் அலுவலகம்
- திருவாரூர்
- கலெக்டர்
- சாரு
- மக்கள் தினம்
- மக்கள் தினம் கூட்டம்
- திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டமைப்பு
- தின மலர்
திருவாரூர், ஜூலை 2: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் சாரு, பொது மக்களிடமிருந்து 462 கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் சாரு தலைமை வகித்தார்.
இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகள் குறித்த 462 மனுக்களை கலெக்டர் சாருயிடம் அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு சம்மந்தப்ப ட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும் மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர். வழக்கம்போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் நேரில் வந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற 3வது தேசிய அளவிலான டேக்குவான்-டோ சாம்பியன்ஷிப் போட்டியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு 8 தங்கப்பதக்கம், 5 வெள்ளிப்பதக்கம், 15 வெண்கலப்பதக்கங்கள் பெற்றனர். தங்கப்பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதிப் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை கலெக்டர் சாரு நேற்று பாராட்டினார்.
கூட்டத்தில் டிஆர்ஒ சண்முகநாதன், ஆர்டிஒ சங்கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.