×
Saravana Stores

மருத்துவர்கள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்

திருப்போரூர்: சிறுங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவப் பிரிவின் சார்பில், அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா தலைமை தாங்கினார். திருப்போரூர் அரிமா சங்க நிர்வாகிகள் பெருமாள், தாமோதரன், பிச்சைமணி, ஜெயக்குமார், சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் வானதி நாச்சியார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு மருத்துவக் கல்வியின் அவசியம், மக்களின் உடல் நலத்தில் மருத்துவர்களின் பங்கு ஆகியவற்றை விளக்கிப் பேசி அனைவருக்கும் நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.

The post மருத்துவர்கள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Nilavembu ,Doctors Day ,World Doctor's Day ,Anumanthapuram ,Government High School ,Psychiatry Department ,Sirungunram Government Primary Health Centre ,Pramila ,Tiruporur ,Arima Sangha ,Perumal ,Damodaran ,Pichaimani ,Nilvembu ,Doctors' Day ,
× RELATED மருத்துவர்களுக்கு பாராட்டு