- பேரிடர் மேலாண்மை
- வண்டலூர்
- தானியங்கி மழை அளவீடு நிலையம்
- குடவாஞ்சேரி
- அண்ணா பூங்கா
- வந்தலூர் - கேலம்பாக்கம் சாலை
- வண்டலூர் தானியங்கி மழை மானி
- தின மலர்
கூடுவாஞ்சேரி: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா எதிரே தனியார் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தானியங்கி மழை மற்றும் பருவ கால வானிலை மழைமானி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன் நேற்று திடீரென வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விளக்கங்களை கேட்டு அறிந்தார். அப்போது அவருடன் வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா உட்பட ஏராளமான உடன் இருந்தனர்.
The post வண்டலூர் தானியங்கி மழைமானி நிலையத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.