×
Saravana Stores

நெற்பயிரை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த குரும்பிறை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், காஞ்சிபுரம் வந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்; காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த குரும்பிறை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பூர்வீகமாக நாங்கள் கிராமத்தில் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில் விவசாயம் செய்து ஜீவனம் செய்து வருகிறோம். தற்போது, நெல் சாகுபடி செய்துள்ளோம்.

இரவில் ஏராளமான மாடுகள் வயலில் இறங்கி, நெல் பயிரை நாசம் செய்கின்றன. மேலும், பகலில் பஜார் வீதிகளில் படுத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையறாக இருக்கின்றன. அதேபோல, இரவில் காட்டு பன்றிகள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. நெல் வயலில் இறங்கி நெற்பயிரை நாசம் செய்கின்றன. ஏற்கனவே விவசாயம் செய்வதில் ஏற்படும் கடனில் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, நெற்பயிர் விவசாயத்தை காக்கும் வகையில் காட்டுப்பன்றி ஒழிக்கவும் மற்றும் மாடுகளை கட்டுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post நெற்பயிரை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kurumpirai ,Chalavakkam, Kanchipuram district ,Uthramerur circle ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram district ,Kurumpirai village ,Chalavakkam ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட...