பொன்னை, ஜூலை 2: வள்ளிமலை அருகே செல்போன் திருடியதாக ஏற்பட்ட தகராறில் சாமியாரை அடித்துக்கொன்ற வழக்கில் நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் உள்ள வள்ளிமலை கோட்டநத்தம் பகுதியில் விவசாய நிலத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சாமியார் ரவி(65) அங்குள்ள குடிசையில் இரவு நேரங்களில் தங்கி வந்தார். இந்நிலையில் சாமியார் ரவி அப்பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(46) என்பவரின் செல்போனை திருடி விட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் ஹரி கிருஷ்ணன், மதன்குமார், லோகேஷ், பிரபு, திருமலை உள்ளிட்டோர் சாமியார் ரவியை அடித்து செல்போன் திருடி இருந்தால் கொடுத்துவிடும் படி கேட்டுள்ளனர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு சாமியார் ரவியை ஹரிகிருஷ்ணன் கீழே தள்ளியுள்ளனர். இதில், அவர் கீழே விழுந்ததில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 14ம் தேதி ஹரி கிருஷ்ணன், மதன்குமார், லோகேஷ், பிரபு உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த கோட்டநத்தத்தை சேர்ந்த திருமலை(31) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருவலம்- பொன்னை கூட்ரோட்டில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த திருமலையை கைது செய்து காட்பாடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த appeared first on Dinakaran.