×

துறைமுக மருந்தக ஊழியர் உள்பட இருவரிடம் செல்போன்கள் பறித்த மூவருக்கு வலை

தூத்துக்குடி, ஜூலை 2: தூத்துக்குடி துறைமுக மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவரிடம் செல்போன்களை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி தெர்மல்நகர் காதர்மீரான்நகரை சேர்ந்த முருகையாவின் மகன் கலைப்புலி (24). தூத்துக்குடி புதிய துறைமுக மருத்துவமனையில் மருந்தக ஊழியராக பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் இரவு தெற்கு கடற்கரைச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேர், இவரை மறித்து கத்தியை காட்டி மிரட்டியதோடு அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றனர். மற்றொரு சம்பவம்: இதேபோல் தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூரைச் சேர்ந்த ராமசாமியின் மகனான சங்கர் (46) என்பவர் தூத்துக்குடியில் இருந்து பைக்கில் தனது ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். முத்தையாபுரம் பகுதியில் சென்றபோது ஒரே பைக்கில் வந்த 3 பேர், இவரை மறித்து மிரட்டியதோடு அவரிடம் இருந்த ரூ.3,500 மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இவ்விரு சம்பவங்கள் குறித்து தென்பாகம் மற்றும் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

The post துறைமுக மருந்தக ஊழியர் உள்பட இருவரிடம் செல்போன்கள் பறித்த மூவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Murugaya ,Kalaipuli ,Katharmeerannagar, Thoothukudi Thermalnagar ,Thoothukudi New Port Hospital ,
× RELATED தூத்துக்குடி விமான நிலையத்தில்...