- வள்ளியூர் ஒன்றியம்
- வள்ளியூரில்
- நெல்லை
- மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியக் குழு
- ஜனாதிபதி
- ராஜா ஞானதிரவியம்
- தின மலர்
வள்ளியூர்,ஜூலை 2: வள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.82 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இதில் வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் தலைமை வகித்தார். வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மங்கையர்கரசி, சங்கர்ராமன், ஒன்றிய பொறியாளர்கள் கணபதி ராமன், ரமேஷ், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், ரூ.82 லட்சம் மதிப்பில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டபகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தற்போது நடைபெற்று வரும் திட்ட பணிகளின் நிலை குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரைகானா ஜாவித், பிலிப்ஸ், பொன்குமார், டெல்சி ஒபிலியா, தாய்செல்வி, கொசிஜின், ஜெயா, மகாலெட்சுமி, மல்லிகா அருள், பாண்டித்துரை, ஜெயலெட்சுமி, அனிதா, அஜந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.82 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.