×

அல்லு அர்ஜுன் பட விழாவில் தள்ளுமுள்ளு; ரசிகர்கள் காயம்

ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்துள்ள படம் புஷ்பா. இந்த படத்தின் புரமோஷனின் ஒருபகுதியாக ஐதராபாத்தில் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அல்லு அர்ஜுனை காண ஏராளமான ரசிகர்கள் வந்ததை அடுத்து அங்கு சலசலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால்  பல ரசிகர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், புஷ்பா புரமோஷன் விழாவை ரத்து செய்துவிட்டு அல்லு அர்ஜுன் வீடு திரும்பி விட்டார்.இந்நிகழ்ச்சி குறித்து அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: நிகழ்ச்சியில் எனது ரசிகர்கள் காயம் அடைந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து அறிந்தேன். எனது குழுவினர் தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணித்து, என்னிடம் தகவல் தெரிவித்து வருகின்றனர். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நான் மிகவும் கவனமாக இருப்பேன். உங்கள் அன்பும், அபிமானமும் எனது மிகப் பெரிய சொத்து. அவற்றை நான் ஒருபோதும் இழக்க போவதில்லை என்று கூறியுள்ளார்….

The post அல்லு அர்ஜுன் பட விழாவில் தள்ளுமுள்ளு; ரசிகர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Tollumullu ,Allu Arjun Film Festival ,Hyderabad ,Allu ,Rashmika ,Pushpaa ,Nagarjuna ,Film Festival ,
× RELATED ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா...