- ஆர்.
- இந்தியா
- கார்கே சரமாரி
- தில்லி
- R.S.
- கார்கே சரமாரி
- மல்லிகார்ஜுனா கர்கே
- ஜனாதிபதி
- ஆர். எஸ்.
- ஆர். எஸ்.
டெல்லி: ஆர்.எஸ்.எஸின் கொள்கைகள் இந்தியாவுக்கே ஆபத்தானது என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே சரமாரி விமர்சனம் செய்துள்ளார். மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அதில்,
ஆர்.எஸ்.எஸ். பற்றி காட்டமாக விமர்சித்த கார்கே
நாட்டின் அரசியலமைப்புக்கு ஆர்.எஸ்.எஸ். கொள்கை எதிரானது என்று கார்கே குற்றச்சாட்டு வைத்தார். ஆர்.எஸ்.எஸ். பற்றிய கார்கே குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா எதிர்ப்பு தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். பற்றி கார்கே பேசிய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க ஜே.பி.நட்டா கோரிக்கை வைத்துள்ளார்.
கார்கே – தன்கர் இடையே காரசார விவாதம்
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருப்பது குற்றமில்லை என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதில் அளித்தார். கார்கே பேசிய ஆர்எஸ்எஸ் பற்றிய சில விமர்சனைகளை அவை குறிப்பில் இருந்து தன்கர் நீக்கினார். அவை குறிப்பில் இருந்து தனது பேச்சு நீக்கப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
அக்னி வீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – கார்கே
அக்னி வீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் நடந்த கலவரத்துக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பு ஏற்க வேண்டும். நாட்டின் கல்வி முறையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து ஒட்டுமொத்தமாக சீரமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ஆர்.எஸ்.எஸின் கொள்கைகள் இந்தியாவுக்கே ஆபத்தானது… மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே சரமாரி விமர்சனம் appeared first on Dinakaran.