×

16, 17ல் வங்கிகள் ஸ்டிரைக்: வெங்கடாசலம் திட்டவட்டம்

புதுடெல்லி: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது: ‘ஒன்பது வங்கி தொழிற்சங்கங்கள் சார்பாக வரும் 16, 17 தேதிகளில் வங்கி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய கூடுதல் தொழிலாளர் நல ஆணையர் ஜோஷி பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இதில் அரசு அறிவித்துள்ள மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மாட்டோம் என உறுதி அளித்தால் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவது குறித்து பரிசீலனை செய்கிறோம் என தெரிவித்தோம். ஒன்றிய அரசு உறுதி அளிக்க மறுத்து விட்டது. அதனால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடக்கும்.  இதில், 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்….

The post 16, 17ல் வங்கிகள் ஸ்டிரைக்: வெங்கடாசலம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Venkatasalam ,New Delhi ,general secretary ,All India Bank Employees Association ,
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...