×
Saravana Stores

நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது..கல்வித்துறையில் மிகப்பெரிய மோசடி: திமுக எம்.பி. ஆ.ராசா சாடல்

சென்னை: நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்று ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு வைத்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்று ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதில், தொடக்கத்தில் இருந்து நீட் தேர்வை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. கல்வித்துறை நடவடிக்கையில் நீட் தேர்வு என்பது மிகப்பெரிய மோசடி. பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களை மீண்டும் ஒரு தேர்வுக்கு நிர்பந்திக்கிறது நீட் என்றும் தெரிவித்தார். வடமாநிலங்களில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதை நீட் -தேர்வு வெளிக்கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வுக்கு அடிப்படை தேவை இல்லை என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

The post நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது..கல்வித்துறையில் மிகப்பெரிய மோசடி: திமுக எம்.பி. ஆ.ராசா சாடல் appeared first on Dinakaran.

Tags : Dimuka M. B. ,Raza Saddle ,Chennai ,NEET ,Raza M. B. ,Rasa Saddal ,Dinakaran ,
× RELATED அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க...