- ஆதி திராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி
- சென்னை
- ஆதி திராவிடர் நலத்துறை
- ஆதி திராவிடர்
- நலத்துறை இயக்குனர்
சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நல இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு 2024ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி வரையில், வரையறுக்கப்பட்ட மற்றும் இதர தகுதிகளின் அடிப்படையில் இறுதி பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 84 பேரின் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பார்வைக்கு சுற்றுக்கு விடப்பட்டு அதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 7 நாளுக்குள் உரிய ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The post ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.