தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி சார்பில், தூய்மைப்பணி, பூங்காக்கள் சீரமைத்தல், சாலை அமைத்தல், குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பம்மல், பல்லாவரம், செம்பாக்கம், பெருங்களத்தூர் மற்றும் கிழக்கு தாம்பரம் மண்டலங்களில் உள்ள 70 வார்டுகளில் மழைநீர் வடிகால்வாய்களில் கழிவு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி சார்பில் 785 கிமீ நீளத்திலான மழைநீர் வடிகால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் வடிகால்களில் கழிவு அகற்றும் பணியில் 250 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிக்காக 8 பொக்லைன் இயந்திரங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள், 10 டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றப்பட்டுள்ளது.
மேலும் 70 வார்டுகளில் மழைநீர் வடிகால்வாய்களில் கழிவு அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம் appeared first on Dinakaran.