திருவள்ளூர்: டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலை டேங்கர் லாரியிலிருந்து திருடியது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தூரில் சந்தேகத்துக்குரிய வகையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியை சோதனை செய்ததில் டீசல் திருட்டு அம்பலமானது. டேங்கர் லாரி மற்றும் டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் பெட்ரோல், டீசலை ஒட்டுனர்கள் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணூர் டாங்க் முனையத்திலிருந்து கல்பாக்கம் நீலாசாமி ஏஜென்சிக்கு செல்லாமல் வழியில் நிறுத்தி டீசல் திருடியுள்ளனர்.
The post டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல் appeared first on Dinakaran.