×

கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை… ரூ. 10 லட்சம் அபராதம் : தமிழகத்தில் புதிய சட்டம்

சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்து வைத்தா நிலையில் அந்த மசோதா நிறைவேறியது. இந்த புதிய சட்டத் திருத்தத்தால் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்படுகின்றன. அதில் மிக முக்கியமாக மதுவிலக்கு திருத்த சட்டம் இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, ” விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுவிலக்கு சட்டத்தில் இன்னும் பல்வேறு திருத்தங்கள் தேவைக்கேற்ப கொண்டு வரப்படும். கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் கடுமையான திருத்தங்களும் கொண்டு வரப்படும்,”இவ்வாறு தெரிவித்தார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த நிலையில், மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை… ரூ. 10 லட்சம் அபராதம் : தமிழகத்தில் புதிய சட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Minister ,Muthusamy ,Tamil Nadu Assembly ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...