×

லடாக் ராணுவ டாங்க் விபத்து: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

லடாக்: ராணுவ டாங்க் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் ராணுவ பயிற்சியின்போது டாங்க் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஆற்றை கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ராணுவ டாங்க் அடித்துச் செல்லப்பட்டது. உயிரிழந்த 5 பேரில் ஒருவர் ஜே.சி.ஓ. நிலை அதிகாரி என்றும் எஞ்சிய 4 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லடாக் ராணுவ டாங்க் விபத்து: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Ladakh Army Tank Accident ,Defense Minister ,Rajnath Singh ,Ladakh ,Army ,Dinakaran ,
× RELATED ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத்...