தஞ்சாவூர், ஜூன் 29: தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடும் வகையில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக தஞ்சாவூர் கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய ஜூலை 18ம் நாளை ”தமிழ்நாடு நாள் விழாவாக” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இவ்விழாவினை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளன.
கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 9.7.2024 (செவ்வாய்) அன்று தஞ்சாவூர் மேம்பாலம், அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு ”ஆட்சிமொழி தமிழ்”. பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் 1.குமரித்தந்தை மார்சல் நேசம், 2.தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, 3.முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. பங்கேற்புப்படிவம், போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும். இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.