×

தென்னை, பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அரசு மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், ஜூன் 29: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தீவன அபி விருத்தித் திட்டத்தின்கீழ் தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடு பயி ராக பசுந்தீவனம் வளர்க்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இதகுறித்து பெரம்பலூர் மாவ ட்டக் கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2024-25-ஆம் ஆண்டிற்கு தென்னை மற்றும் பழத் தோட்டங்களில் ஊடுபயி ராக பசுந்தீவனம் வளர்க்க பெரம்பலூர் மாவட்டத் திற்கு 50 ஏக்கர் இலக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் விவசாயிக ளுக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ3000 முதல் ஒரு ஹெக் டேருக்கு ரூ7,500 வரை அர சால் மானியமாக வழங்கப் படுகிறது. மேலும் குறைந் தது 0.50 ஏக்கர் அதிகப் பட்ச மாக 1 ஹெக்டேர் நிலப்பரப் பில் தொடரந்து பல்லாண் டுகள் பயன்தரும் தீவனப் பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருட காலம் பராமரிக்க வேண் டும்.

பசுந்தீவனம் உற்பத்தி செய்ய விருப்பமுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயி கள் முக்கியமாக எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு முன் னுரிமை வழங்கப்படுகிறது. ஆகவே, இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் தென்னை மற்றும் பழத்தோட்டம் உள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களைப் பெற்று, உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், அலைபேசி எண், ஆதார் எண் தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post தென்னை, பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அரசு மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur Mawatak ,Karpakam ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28ம் தேதி நடக்கிறது