- பெண்டமோனியம்
- திருச்சூர்
- திருவனந்தபுரம்
- எர்ணாகுளம்
- டாடா நகர் எக்ஸ்பிரஸ்
- செருத்துருத்தி வள்ளத்தோள் நகர்
- தின மலர்
திருவனந்தபுரம்: எர்ணாகுளம் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் நேற்று காலை எர்ணாகுளத்தில் இருந்து வழக்கம் போல புறப்பட்டு சென்றது. இந்த ரயில் திருச்சூரை தாண்டி செறுதுருத்தி வள்ளத்தோள் நகர் அருகே சென்று கொண்டிருந்தது. ரயில் எஞ்சினை ஒட்டி ஜெனரேட்டர் பெட்டி பொருத்தப்பட்டிருந்தது. ரயில் சென்று கொண்டிருந்தபோது ஜெனரேட்டர் பெட்டிக்கு பின்புறம் இருந்த பெட்டிகள் திடீரென கழன்றன.அப்போது ரயில் மிகவும் மெதுவாக சென்று கொண்டிருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் எஞ்சின் பின்புறமாக கொண்டு செல்லப்பட்டு பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
The post திருச்சூர் அருகே பரபரப்பு: ஓடும் ரயிலில் இருந்து தனியாக கழன்ற பெட்டிகள் appeared first on Dinakaran.