மதுரை, ஜூன் 29: அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் உள்ள உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். இதன்படி நேற்று திருக்கல்யாண மண்படத்தில் இந்த பணிகள் நடைபெற்றது. இதில் கோயில் துணை ஆணையர் கலைவாணன், மதுரை உதவி ஆணையர் வளர்மதி முன்னிலை வகித்தனர்.
இதில் அலங்காநல்லூர் சரக ஆய்வர் சாவித்திரி, அறங்காவலர் குழு பிரதிநிதி நல்லதம்பி, அறங்காவலர்கள், கோயில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, பிஆர்ஓ முருகன், வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். முடிவில் கோயில் உண்டியல்களில் இருந்து ரூ.56 லட்சத்து 51 ஆயிரத்து 119 ரொக்கம், தங்கம் 92 கிராம், வெள்ளி 260 கிராம் மற்றும் வௌிநாட்டு டாலர்கள் உள்ளிட்டவை காணிக்கையாக கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post கள்ளழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.56 லட்சம் appeared first on Dinakaran.