×

மாவட்டத்தில் 297 மி.மீ மழை பதிவு

 

கோவை, ஜூன் 29: கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாநகர் முழுவதும் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காலநிலை நிலவியது. மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளது.

அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. சிறுவாண, பில்லூர் அணைகள் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் 297மி.மீ மழை பதிவாகியது. அதன்படி, சிறுவாணி அடிவாரம் 21மி.மீ, பொள்ளாச்சி 14.20மி.மீ, மாக்கியானம்பட்டி 16.20மி.மீ, அனைமலை 5மி.மீ, ஆழியார் 4மி.மீ, சின்கோனா 38மி.மீ, சின்னகல்லார் 82மி.மீ, வால்பாறை 42மி.மீ, வால்பாறை தாலுகா 39மி.மீ, சோலையார் 32மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இன்று, நாளை என இரண்டு நாட்கள் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மாவட்டத்தில் 297 மி.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Western Ghats ,Dinakaran ,
× RELATED விவசாய தோட்டத்திற்குள் வரும் காட்டு யானையால் விவசாயிகள் அச்சம்!