×

கள் விற்பனைக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜூன் 29: தமிழகத்தில் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பலிகளை தடுக்க உடல் நலனை மேம்படுத்தும் கள்ளை இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள உணவு தேடும் உரிமையின் ஒரு அங்கமான தென்னம்பால், பனம் பால் என அழைக்கப்படும் கள்ளை இறக்கி விற்க, தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துவேல், சக்தி, ஒருங்கிணைப்பாளர் ரவி, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன.

The post கள் விற்பனைக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : s. Erode ,Tamil Nadu ,Tennambal ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...