×

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதவியல், வேதியியல், தாவரவியல், வணிகவியல் என 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது. மேற்கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி விவரம்: முதுகலை ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட இந்த தற்காலிக நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2025 வரையிலும் தற்காலிகமாக நிரப்பப்படும். பணிநாடுநர்கள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்துகொண்டு, அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வி தகுதிச்சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 5ம்தேதி மாலை 5.45க்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar Welfare Department ,Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalaichelvi Mohan ,Adi Dravidar Welfare High Schools ,
× RELATED ஆதிதிராவிடர் நலத்துறை...