×

காவேரிப்பட்டணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காவேரிப்பட்டணம், ஜூன் 29: காவேரிப்பட்டணத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். காவேரிப்பட்டணம்-சேலம் மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இப்பகுதியில் கடைக்காரர்கள் ஆக்ரமித்து தங்கள் கடைகளை வைத்துள்ளனர். இதனால், மழைக்காலங்களில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலைகளில் வெள்ள நீர் வழிந்தோடுவதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க, பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமாரிடம் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சேலம் மெயின் ரோடு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய்களை பொக்லைன் மூலம் சுத்தம் செய்யும் பணியினை பேரூராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். மேலும் காவல் நிலையத்திற்கு எதிரில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பேரூராட்சி தலைவர் அப்புறப்படுத்தினார். இதை தொடர்ந்து, கழிவுநீர் கால்வாய் மீது கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, அதையும் மீறி கடைகள் வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.

The post காவேரிப்பட்டணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kaveripatnam ,Kaverippatnam ,Kaveripatnam-Salem Main Road ,
× RELATED ₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை