×

‘பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முதல்வரையும் சேர்க்க வேண்டும்’: – செல்வப்பெருந்தகை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு 32 சதவீதம் மட்டுமே நிதி வழங்குகிறது, தமிழக அரசு 68 சதவீத நிதி வழங்குகிறது. ஆனால் வீடு கட்டி முடித்த பின் அதில் (PMAY) என பிரதமரை பற்றி இருக்கிறது. அந்த திட்டத்தில் முதல்வரையும் சேர்க்க வேண்டும். காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு யோகா பயிற்சி வழங்க வேண்டும். குரூப்-I தேர்வு எழுதி வரும் துணையாட்சியர்கள் குறைந்த காலத்திலேயே ஐஏஎஸ் ஆக மாறுகிறார்கள், ஆனால் டிஎஸ்பியாக சேர்ந்தவர்கள் பலர் 15 ஆண்டுகளாகியும் ஐபிஎஸ் ஆக முடியவில்லை, அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முதல்வரையும் சேர்க்க வேண்டும்’: – செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Selvaperundagai ,CHENNAI ,Legislative Assembly ,Congress Legislative Committee ,Selvaperunthakai ,Union Government ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...