×

தேர்வு முடிவுகள் வெளியானதுமே தேர்வர்களின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திண்டுக்கல்லை சேர்ந்த முத்துலெட்சுமி, குணசீலன் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 30.1.24ல் குரூப் 4 தேர்வு குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில் நாங்களும் விண்ணப்பித்தோம். இதற்கான தேர்வை கடந்த ஜூன் 9ம் தேதி எழுதினோம். டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மட்டும் விடைத்தாள்களை வௌியிடுவதில்லை. எனவே, டிஎன்பிஎஸ்சியும் தேர்வு முடிவுகளை அறிவிப்பு செய்தவுடன், விடைத்தாள்களை வௌியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மற்ற தேர்வு நடத்தும் தேர்வு முகமைகள், தேர்வாணையங்கள், தேர்வு முடிவுகளை வெளியிட்ட உடனே விடைத்தாள்களை வௌியிடுகின்றனர். டிஎன்பிஎஸ்சி மட்டும் ஏன் வௌியிட மறுக்கிறது? இனி வரும் காலங்களில் ேதர்வு முடிவுகளை அறிவித்த உடனே தேர்வர்களின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

The post தேர்வு முடிவுகள் வெளியானதுமே தேர்வர்களின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,ICourt Branch ,Madurai ,Muthuletsumi ,Gunaseelan ,Dindigul ,ICourt Madurai ,Dinakaran ,
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...