×

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விரைவில் அமெரிக்கா பயணம்

சென்னை: பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலளித்து பேசியதாவது: உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 101 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்ததன் விளைவாக ரூ.10,882 கோடி முதலீடு கிடைத்துள்ளது. அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்து வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக, மீண்டும் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்றார்.

The post தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விரைவில் அமெரிக்கா பயணம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,America ,CHENNAI ,Minister ,DRP ,Raja ,Industry, Investment Promotion and Commerce Department ,World Investor Conference ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர்...