- அமைச்சர்
- தமோ அன்பரசன்
- சென்னை
- நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில் துறை
- சட்டசபை
- யூனியன் அரசு
- அஇஅதிமுக
- யூனியன்
- தம்மோ.அன்பரசன்
சென்னை: சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்ந்தது. ஏற்கனவே ஒன்றிய அரசின் பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தால், கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இந்த மின்கட்டண உயர்வால் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த பிரச்சனையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். முதல்வர், உச்சவேளை சார்ஜர் உச்சபட்ச நேர மின் நுகர்வோர்கான கட்டணத்தை 25 % லிருந்து 15 % ஆக குறைத்தும் உச்சபட்ச நேர மின் நுகர்வு கட்டணத்தை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை தள்ளி வைக்கவும், சோலார் நெட் ஒர்க் கட்டணத்தை 50 % ஆக குறைத்தும் உத்தரவிட்டுள்ளார். எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்காக, அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை ரூ.330 கோடியே 81 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. நடப்பாண்டு ரூ. 351 கோடியே 77 லட்சம் முதல்வர் ஒதுக்கி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
The post உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்ந்துள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.