×

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு செய்முறை: ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்பு

செங்கல்பட்டு: தமிழ்நாடு தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு செய்முறை மற்றும் கயிறுகளை பயன்படுத்தி உயர்களை மீட்கும் நடவடிக்கைகளை இணை இயக்குனர் தாம்பரம் மாநில பயிற்சி மையம் சத்தியநாராயணன் அறிவுரைபடி செங்கல்பட்டு மாவட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் அதிகமான வீரர்கள் கலந்துக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் தீயனைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையினர் பயன்படுத்தும் பல்வேறு சிறப்பு கருவிகளுக்கான கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துக்கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.

முன்னாள் சி.ஐ.எஸ்.எப் வீரர், என்.டி.ஆர்.எப் பயிற்சியாளர் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் ஜனாதிபதி விருது பெற்றவருமான மரிய மைக்கேல் சிறப்பான பயிற்சிகள் மூலம் தீயனைப்பு வீரர்கள் பலமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்கும் பயிற்சி வெள்ளக்காலங்களில் ஆற்றினை குறுக்காக கடப்பது மற்றும் கரடு முரடான மலைகளில் கயிறு மூலம் ஏறுவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறப்பாக செய்து காண்பிக்கப்பட்டது. வீட்டிலலோ அல்லது அலுவலகத்திலோ மின்சார தீ விபத்து எல்.பி.ஜி தீ விபத்து மற்றும் மண்ணெண்ணெய் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அதனை எவ்வாறு தீயனைப்பான் மற்றும் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு தீயை அணைப்பது என்பதை தீயனைப்பு வீரர்கள் செயமுறை விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர் இந்த செய்முறை பயிற்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்துறை, பள்ள கல்விதுறை, வேளாண்துறை, என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

The post செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு செய்முறை: ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District Governor's Office ,Ruler Arunraj ,CHENGALPATTU ,NADU ,FIRE ,RESCUE WORKS DEPARTMENT ,DISTRICT ,THAMBARAM STATE TRAINING CENTRE ,SATYANARAYANAN ,ROPE RESCUE OPERATIONS ,Dinakaran ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...