×

குதிரைவாலி இனிப்பு ஆப்பம்

தேவையானவை

குதிரைவாலி – ஒரு கப்
கார் அரிசி – ஒரு கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கருப்பட்டி – இரண்டு கப்
இளநீர் – அரை கப்.

செய்முறை:

முதலில் குதிரைவாலியுடன் கார் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல்நாளே வாங்கிவைத்துப் புளிக்கவைக்க வேண்டும். புளித்த இளநீரை அரைத்துவைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்கவிடவும். கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி மூடி வைத்து வேக விடவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும். சத்தும், சுவையும் மிக்க குதிரைவாலி இனிப்பு ஆப்பம் தயார்.

 

The post குதிரைவாலி இனிப்பு ஆப்பம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பீர்க்கங்காய் துவையல்