×

கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதிய கட்டடம் இடிந்து விபத்துகுள்ளானது

டெல்லி: இடிந்து விழுந்த கட்டிடத்துக்குள் 3 தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் தகவல். கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். புதிய கட்டிடம் அருகே தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசையும் இடிந்து விழுந்தது

தென்மேற்கு டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கட்டப்பட்டு வரும் சுவர் இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததும், டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் டிஎஃப்எஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுவர் இடிந்து விழுந்ததையடுத்து, மூன்று தொழிலாளர்கள் அதற்கு அடியில் புதைந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்தது குறித்த தகவல் கிடைத்ததாகவும், அதன்பிறகு 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தனர். இடிபாடுகளுக்குள் மூன்று தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்று கூறினார்

NDRF (National Disaster Response Force), DDMA (டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம்), பல்வேறு சிவில் ஏஜென்சிகள், தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. தொழிலாளர்களை காப்பாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் தெரிவித்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஆழமான குழிக்குள் விழ வாய்ப்புள்ளதாகவும், அவர்களை மீட்க நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் கிரேன்கள் மூலம் குப்பைகளை அகற்றி வருவதாகவும், பம்புகள் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருவதாகவும் தகவல் தெரிவித்தார். டெல்லியில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதிய கட்டடம் இடிந்து விபத்துகுள்ளானது appeared first on Dinakaran.

Tags : Delhi Vasanthvihar ,Delhi ,Vasant Vihar ,southwest Delhi ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!